போருக்குத் தப்பி வரும் உக்ரைன் பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, பதிலுக்கு அவர்களிடம் பாலியல் ரீதியிலான பதிலுதவிகளை எதிர்பார்க்கும் ஆண்களைக் குறித்த செய்திகள் பல வெளியாகிவருகின்றன.
தற்போது, உக்ரைன் அகதிகள் சிலருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள பெண் ஒருவரே, அவர்களிடம் பாலியல் ரீதியான விடயங்கள் தொடர்பில் அணுகியதாக பொலிசாருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் வாழும் ஒரு பெண், சில உக்ரைன் இளம்பெண்களுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
அவர்களில் ஒரு 19 வயது இளம்பெண்ணை வெப்கேம் மூலம் பாலியல் நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா என கேட்டுள்ளார் அந்தப் பெண்.
நீ அதற்கு சம்மதித்தால், உனக்கு நாளொன்றிற்கு 350 டொலர்கள் வரை கிடைக்குமென அந்த இளம்பெண்ணிடம் ஆசைகாட்டியுள்ளார் அந்த கனேடிய பெண்.
இந்த விடயங்களை அந்தப் பெண் குறுஞ்செய்திகள் மூலம் அந்த இளம்பெண்ணிடம் கேட்டதால், ஆதாரத்துடன் சிக்கிக்கொண்டுள்ளார் அவர்.
இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக லண்டன் பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.