Reading Time: < 1 minute

ரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் 100 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

உக்ரைனுக்கு ஆதரவளிப்பதுடன் தமது கொள்கைகளுக்காக உலகம் ஒன்றுபட வேண்டிய தருணம் இது என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மேலும், நட்பு நாடுகளின் உதவியுடன் திரட்ட திட்டமிட்டுள்ள 12.4 பில்லியன் டொலர் தொகையை உக்ரைனுக்கு அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனுக்கு 500 மில்லியன் டொலர் இராணுவத்திற்கான நிதியுதவியாகவும் மேலதிகமாக 1 பில்லியன் டொலர் கடனாக அளிக்கவும் கனடா உறுதி அளித்துள்ளது.

மட்டுமின்றி, கனடாவின் குடிவரவு அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும், இதனால் போர் சூழலில் இருந்து தப்பிச் செல்லும் அதிகமான மக்கள் கனடாவில் தஞ்சம் அடைவதற்கு உதவும் எனவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு பின்னர் இதுவரை 12,000 உக்ரைன் மக்கள் கனடாவுக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.