ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் களமிறங்கிய இரு கனேடியர்கள் கடந்த வாரம் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரது வீரத்தையும் உக்ரேனிய ராணுவத்தினர் பெரிதும் பாராட்டியுள்ளனர். ஒன்ராறியோவின் St. Catharines பகுதியை சேர்ந்த 21 வயது Cole Zelenco மற்றும் கல்கரி பகுதியை சேர்ந்த 27 வயது Kyle Porter ஆகியோரே உக்ரைனின் பக்முத் பகுதியில் கொல்லப்பட்டவர்கள்.
உக்ரைனின் பக்முத் பகுதியில் பல வாரமாக நடந்துவரும் சண்டையில், ரஷ்யாவின் தொடர் தாக்குதலில் சிக்கி கனேடியர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர்.
நெருங்கிய நண்பர்களான கனேடியர்கள் இருவரும் உக்ரைனின் 92 வது இயந்திரமயமாக்கப்பட்ட படையணியுடன் இணைந்து போரிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள கனேடிய மனிதாபிமான உதவி ஊழியர் பால் ஹியூஸ் என்பவரே, பக்முத் பகுதியில் இருந்து போர்ட்டரின் உடலை மீட்க உதவியுள்ளார்.
மேலும், கார்கிவ் பகுதியில் அமைந்துள்ள பிணவறையில் அவரது சடலம் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இதனிடையே, இருவரின் உடல்களும் கனடாவுக்குத் திரும்புவதற்கு முன் இந்த வாரம் உக்ரைனில் தனித்தனி விழாக்களில் கௌரவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.