உக்ரேனிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விண்ட்சரில் உள்ள போலந்து கழகத்தில், நினைவஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில், டசன் கணக்கான ஈரானியர்கள் கலந்துக்கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது விமான விபத்தில் உறவுகளை இழந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உயிரிழந்தவர்களின் பழைய காணொளிகளையும் குரல் பதிவுகளையும் பார்த்து, கண்ணீர் சிந்தினர்.
விண்ட்சரில் உள்ள ஈரானிய சமூகம் மிகச் சிறிய சமூகம் என்ற போதிலும், குறித்த விபத்தில் விண்ட்சரை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.
ஈரானின் தெஹ்ரானில் இருந்து கையவ் சென்ற விமானத்தில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 176 பேர் பயணித்த உக்ரேனிய இன்டர்நேஷனல் ஏயார்லைன்ஸ் விமானம் பிஎஸ் 752 விமானம், கடந்த மாதம் 9ஆம் திகதிவிபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர். இதில் 57 கனேடியர்களும் உள்ளடங்குகின்றனர். இதில் 29பேர் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆவார்.
ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலிலேயே குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.