Reading Time: < 1 minute

ஈ ஸ்கூட்டர்கள் மற்றும் ஈ பைக்குகளுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும் என கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வீதிகளில் ஈ ஸ்கூட்டர்கள் மற்றும் ஈ பைக்குகளை பயன்படுத்துவதற்கு அனுமதி நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும் என கனடிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற சுமார் 57 வீதமானவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

அனுமதி பத்திரம் அல்லது ஓர் உரிமம் இந்த ஈ ஸ்கூட்டர் மற்றும் ஈ பைக்குகளுக்கு வழங்கப்பட வேண்டும் என கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறு எனினும் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 36 வீதமானவர்கள் சைக்கிள்களைப் போன்று ஈ ஸ்கூட்டர் மற்றும் ஈ பைக்குகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமென கருத்து வெளியிட்டுள்ளனர்.

கனடாவின் சில நகரங்களில் ஈ ஸ்கூட்டர் மற்றும் ஈ பைக்குகள் பயன்படுத்துவதில் சில வரையறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக அதிகபட்ச வேகம் பயன்படுத்துவோரின் வயதெல்லை போன்றன இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈ ஸ்கூட்டர்கள் மற்றும் ஈ பைக்குகள் பாதசாரிகளுக்கும் விசேட தேவையுடையவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என சில தரப்பினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.