ஈரானய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றுள்ளார்.
நேற்றைய தினம் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
உக்ரேன் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் 752 இலக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக லிப்ரல் அரசாங்கம் சில தடைகளை விதித்த போதிலும் இந்த தடைகள் போதுமானது அல்ல எனவும் ஈரானிய மனித உரிமை மீறல்கள் பாரதூரமானவை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹாலிபிக்ஸ் முதல் வன்கூவார் வரையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டங்களில் ஒட்டோவா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது பாரியார் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் உரிய முறையில் ஹிஜாப் அணியவில்லை என குற்றம் சுமத்தி தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய இளம் யுவதியான மாஷா ஹம்னியின் மரணத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானிய தலைவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.