ஈரானில் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வேண்டி கனடாவில் ஆயிரக்கணக்கானவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
நேற்றைய தினம் ஒன்றாரியோவின் ரிச்மண்டில் பகுதியில் பெரும் எண்ணிக்கில்லான மக்கள் அணி திரண்டு ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஈரானைச் சேர்ந்த பெண் ஒருவர் உரிய முறையில் ஹிஜாப் அணிய தவறியதாக கூறி அந்நாட்டு அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்திருந்தனர்.
இவ்வாறு பெண் கைது செய்யப்பட்ட விவகாரம் மனித உரிமை மீறல் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மட்டுமன்றி ஏனைய பகுதிகளிலும் இந்த பெண்ணுக்கு ஆதரவினை வெளியிட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மாஷா அமினி என்ற 22 வயதான இளம் யுவதி உயிரிழந்தார்.
ஈரானிய அரசாங்கம் மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோரை கைது செய்து கொலை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.