இஸ்ரேல் -ஹமாஸ் விவகாரத்தில் கனடா நடுநிலையை பேண வேண்டும் என அதிகளவான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அரச படையினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரில் கனடா எந்த ஒரு தரப்பிற்கும் ஆதரவளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
இந்தப் போர் விகாரத்தில் கனடா நடுநிலையான மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பான்மையானவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர்.
18 வீதமானவர்கள் மட்டும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 70 வீதமானவர்கள் போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை இந்தப் போர், பிராந்திய வலயத்தில் வியாபிக்கும் அபாயத்தை கொண்டுள்ளதாக 84 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.