Reading Time: < 1 minute

டொரொண்டோ நகரத்தில் 2023ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல்-ஹமாஸ் போராட்டங்களின் போது பாதுகாப்பு வழங்குவதற்காகவும் யூத மற்றும் முஸ்லிம் சமூகங்களுடனான தொடர்புகளை மேம்படுத்தவும் டொரொண்டோ பொலிஸாருக்கு சுமார் 20 மில்லியன் கனேடிய டாலர் செலவாகியுள்ளது.

பொலிஸார் வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில், காவல்துறை 2,000க்கும் அதிகமான “திடீர் நிகழ்வுகளுக்கு” பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி, இந்த திட்டத்திற்காக $19.5 மில்லியன் செலவாகியுள்ளதாகவும், இதில் நேரடி ஊதிய செலவுகளுக்கு மட்டும் $8 மில்லியன் செலவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த திட்டத்திற்காக ஏராளமான பொலிஸார் பதவி மாற்றம் செய்யப்பட்டதால், மற்ற பிரிவுகளில் பெரும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.