Reading Time: < 1 minute

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘இனி பொதுமக்கள் உயிர்கள் இழக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கக் கனடா பன்னாட்டுச் சமூகத்துடன் இணைந்து செயற்படும். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களைச் சுற்றியுள்ள வன்முறைகளுக்காக எங்கள் இதயங்கள் இப்போது செல்கின்றன.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அப்பாவிகள் மற்றும் குழந்தைகளின் சோகமான படங்களை நாங்கள் அனைவரும் பார்த்திருக்கிறோம். இது நிறுத்தப்பட வேண்டும். அதனால்தான் கனடா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது’ என கூறினார்.

இதனிடையே பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ரொறொன்ரோ மற்றும் மொன்றியலில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.