Reading Time: < 1 minute

இஸ்ரேலில் தங்கியுள்ள கனடியர்கள் நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

விமான மூலம் இவ்வாறு கனடியர்கள் அழைத்து வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வரும் பின்னணியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் தெல் அவீவிலிருந்து கனடியர்கள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கனடிய ராணுவத்திற்கு சொந்தமான விமானங்களின் மூலம் இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்திற்கு செல்ல முடியாத கனடியர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வேறு வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கனடிய பிரஜைகள் கனடிய நிரந்தர வதிவிடவுரிமையாளர்கள் ஆகியோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இவ்வாறு மீள அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலில் தங்கியுள்ள கனடியர்கள் +1-613-996-8885 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கோரியுள்ளார்.

மேலும் கனடியர்கள், இஸ்ரேலில் தங்களது நடமாட்டத்தை வரையறுத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எனினும் காஸா பிராந்தியத்தில் தங்கியுள்ள கனடியர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் வெளிவகார அமைச்சர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.