கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வரும் நிலையில், அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தனக்கான மக்கள் செல்வாக்கினை மேம்படுத்தும் நோக்கில் சந்தைப்படுத்தல் உத்திகளை பிரதமர் பின்பற்ற உள்ளார்.
பிரதமர் ட்ரூடோ, தனது தொடர்பாடல் நிறைவேற்றுப் பணிப்பாளராக பிரபல சந்தைப்படுத்தல் நிபுணரான மெக்ஸ் வலிக்குவாட்டை நியமித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடக்கம் பிரதமரின் தொடர்பாடல் பிரிவிற்கு வலிக்குவாட் பொறுபேற்றுக்கொள்ள உள்ளார்.
உலகின் முன்னணி சந்தைகளில் பண்டக்குறிகளை பிரபல்யப்படுத்துவதில் நிபுணரான வலிக்குவாட் திகழ்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் முன்னணி பண்டக்குறிகளான கொகாகோலா, நைகீ உள்ளிட்டனவற்றின் சந்தைப்படுத்தல்களுக்கான விக்குவாட் சிறந்த பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
மக்கள் மத்தியில் தனது செல்வாக்கினை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பிரதமர் இவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளார்.