Reading Time: < 1 minute
கனடாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவரும் நிலையிலும், இலவச பேருந்துகளை Orangeville நகரம் வழங்கப்படுகிறது என்னும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Orangeville என்னும் நகரத்தில்தான் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
ஆகவே, அந்நகரத்தில், பேருந்தில் பயணிக்கும் மக்கள் எண்ணிக்கை 150 சதவிகிதம் முதல் 160 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக நகர மேயரான லிசா போஸ்ட் தெரிவிக்கிறார்.
2023ஆம் ஆண்டு, இலவச பேருந்து சேவையை சோதனை முயற்சியாக துவக்கியது Orangeville நகரம். 2027ஆம் ஆண்டுவரை இந்த இலவச பேருந்து சேவை நீடிக்கும் என அந்நகர அதிகாரிகள் உறுதியளித்துள்ளார்கள்.
இந்த சிறிய நகரத்தில் இலவச பேருந்து சேவை வழங்கப்படும் நிலையில், பெரிய நகரங்களிலும் அது சாத்தியமா என்னும் விவாதமும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.