இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இருநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட விமான சேவைகள் அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேநேரம் இலங்கையின் சுதந்திரதின நிகழ்விற்கு கௌரவ அதிதியாக கலந்துகொள்ள தாய்லாந்து பிரதமர் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்போது இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.