Reading Time: < 1 minute

கனடாவின் – ஸ்காப்ரோ பகுதியில் இலங்கை அரியாலையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

யாழ் அரியாலையை பூர்வீகமாகக் கொண்ட 66 வயதுடைய மதிசூடி குலத்துங்கம் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Finch & McCowan பகுதியில் உள்ள 34 Whitney Castle Crescent இல்லத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை (Nov 20, 2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு 32 வயது மகன் தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நள்ளிரவு வேளை, தாயை அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து விட்டு, 66 வயதான தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் இளங்கோவை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளார்கள்

காதலில் ஏற்பட்ட முறிவு ஒன்றினையடுத்து 32 வயதேயான இளங்கோ மனோநிலை பாதிக்கப் பட்டிருந்தார் என்று உறவினர்கள் கனடிய ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.