Reading Time: < 1 minute

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாகும்.

மேலும் தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.