Reading Time: < 1 minute

இலங்கைக் குடியுரிமையைக் கைவிட்டு சென்றவர்கள், இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்களுக்கு இலங்கையின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ள புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நபர் அல்லது குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19, 20 அல்லது 21 இன் கீழ் குடியுரிமை நிறுத்தப்பட்டவர் அல்லது வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டவர்கள், 6 மாதங்களுக்குப் பின்னர் புதிய விதிமுறைகளின் கீழ் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் இரத்து செய்யப்பட்டிருந்தால் நிரந்தர வதிவிட அந்தஸ்து தானாகவே இரத்து செய்யப்படும் எனவும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதன்மை விண்ணப்பதாரருக்கு ஆயிரம் டொலர்கள் கட்டணம் அறவிடப்படுவதுடன், இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுக்கு 400 டொலர் கட்டணம் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.