Reading Time: < 1 minute

கனடா, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள், இலங்கைக்குப் பயணம் செய்யும்போது, அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவதால், கவனமாக இருக்குமாறு தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன.

கனடா வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், சமீபத்தில் இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை குறித்து எச்சரித்துள்ளது. அவசர நிலை உள்ளூர் அதிகாரிகளுக்கு வாரண்ட் இல்லாமலே மக்களைக் கைது செய்யும் அதிகாரத்தைக் கொடுக்கும் என்றும், ஆகவே, மிகவும் கவனமாக இருக்குமாறும் இலங்கையிலிருக்கும் தன் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளது கனடா.

அரசுக்கு எதிராக மக்கள் துவங்கிய பேரணிகள் அமைதியாக சென்றுகொண்டிருந்த நிலையில், இலங்கை இராணுவம் போராட்டங்களை அடக்க முயன்றதைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாக தெரிவித்துள்ள கனடா, அமைதியான பேரணிகள் கூட வன்முறையாக மாறலாம் என்றும், ஆகவே, கனேடிய குடிமக்கள் இலங்கையில் இருந்தால் பாதுகாப்பு நிலை கருதி கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், அவசர தூதரக ஆலோசனைக்கு கொழும்பிலிருக்கும் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தை அழைக்குமாறும் கனடா தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் எந்த நேரத்திலும் Ottawaவிலுள்ள Emergency Watch and Response Centreஐயும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கனடா தெரிவித்துள்ளது.