Reading Time: < 1 minute

ரொறன்ரோ நகரின் மேற்கு முனையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியிருந்த நிலையில், இந்நிலைமை தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

மாலை 6 மணிக்கு முன்னதாக ஏற்பட்ட இந்த மின் தடையால், ப்ளூர் ஸ்ட்ரீட் மற்றும் குயின்ஸ்வே, கிப்ளிங் அவென்யூ டு விண்டர்மீர் அவென்யூ இடையேயான பகுதிகளில் சுமார் 6,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குளிர்கால புயலினால் மின் கம்பிகள் மீது ஒரு பெரிய மர கிளை வீழ்ந்ததினாலேயே இத்தடை ஏற்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரவு 9:30 மணிக்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழமைக்கு திரும்பியதாகவும், இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 5 மணியளவில் மின்சாரம் முழுமையாக வழமைக்கு திரும்பியதாகவும், ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.