Reading Time: < 1 minute

இரண்டு கப்பல்களில் பணிபுரியும் கனேடியர்களுக்கு சொந்த ஊருக்குத் திரும்ப, ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால், ஒவ்வொரு நாடுகளிலும் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் கடல் பயணங்களில் ஏராளாமானோர் சிக்கியுள்ளனர்.

இந்தநிலையில் கப்பல்களில் பணிபுரிவோர் நாடு திரும்ப முடியாமல் கடலில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த பட்டியலில் 310 கனேடியர்களும் அடங்குவதாக அண்மைய கணிப்புகள் தெரிவித்தன.

இந்தநிலையில், கொனிங்டாமில் உள்ள 19 கனேடியர்கள் அந்த நிறுவனத்தால், விமானத்தில் அல்லது வாகனத்தில் ஊருக்கு அனுப்பப்படுவர் என பிரின்சஸ் கப்பல் பணிக் குழு தெரிவித்துள்ளது.

இதேபோல, புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலில் உள்ள எமரால்ட் பிரின்சசை விட்டு மேலும் 53 கனேடியர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.