கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நகரங்கள் வழமைக்கு திரும்ப நீண்ட காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.
கியூபிக் மாகாணத்தின் சில நகரங்கள் டெபி புயல் காற்று காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி இருந்தது.
இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த நகரங்கள் வழமைக்கு திரும்புவதற்கு இன்னும் சில மாதங்கள் தேவைப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தின் சுமார் 14 மாநகர சபைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பகுதிகளில் 175 மில்லி மீட்டர் வரையில் மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீடுகளில் கடைகள் காரியாயாலயங்கள் என்பன இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிப்புகளை எதிர் நோக்கியதாகவும் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக கியூபிக் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் மக்கள் மின்சார வசதியின்றி அவதியுற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.