நாட்டில் நிலவும் இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார்.
அல்பர்ட்டாவில் உள்ள பொலிஸின் கட்டளை அதிகாரி பொலிஸில் முறையான இனவெறி இருப்பதை மறுத்து இருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கனடாவின் பொலிஸ்துறையில் முறையான இனவெறி நிலவுகிறது என்ற புரிதலுடன் செயல்பட வேண்டும். மேலும் அவர்கள் இந்த விவகாரத்தில் மனநிறைவுடன் இருக்க முடியாது.
கனடாவில் இங்குள்ள முறையான இனவெறி எங்களுக்கு ஒரு பிரச்சினையாகும். அதைப் பற்றி மனநிறைவு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற புரிதலில் இருந்து பொலிஸ் உட்பட அனைத்துக் கூட்டாட்சி அரசு நிறுவனங்களும் செயற்படுவது மிகவும் முக்கியம். அதற்கு எதிராக நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.’ என கூறினார்.