Reading Time: < 1 minute

பிராம்டன் நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த இந்திய வம்சாவளி பெண்மணி நிக்கி கவுர் (Nikki Kaur), இதுவரை தொடர்ந்த பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கியுள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில், சட்ட நடவடிக்கை முன்னெடுக்க நகர மேயர் போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்த நிக்கி கவுர் (Nikki Kaur) முடிவு செய்துள்ளார்.

பிராம்டன் நகர பொருளாதார வளர்ச்சி, திட்டமிடல் உள்ளிட்ட துறைகளின் இயக்குனராக பொறுக்கு வகித்து வந்துள்ளார் இந்திய வம்சாவளி கனேடியரான நிக்கி கவுர்.

பிராம்டன் நகர நிர்வாக ஊழல்

இந்த நிலையில் பிராம்டன் மேயர் பிரவுனுக்கு எதிராக தேர்தலில் களம் கண்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் அதன் பின்னர் நிக்கி கவுர் (Nikki Kaur) அதுவரை வகித்துவந்த இயக்குனர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

குறித்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் குறிவைத்து பதிலடி அளிப்பது போன்றது என பிராம்டனின் செயல் சட்டத்தரணி டயானா சூஸ் என்பவருக்கு அளிக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பிராம்டன் நகர நிர்வாகம் ஊழலில் ஈடுபடுவதாக 2021ல் முதன்முறையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த நிக்கி கவுர் (Nikki Kaur), அப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர் பின்னர் மீண்டும் அவர் உரிய பதவிக்கு கொண்டுவரப்பட்டார்.

இந்த நிலையில் விடுப்பு எடுத்து சென்ற நிக்கி கவுர் (Nikki Kaur), நகர மேயர் பிரவுனுக்கு எதிராக போட்டியிட்டார். எனினும் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையிலேயே மீண்டும் நிக்கி கவுர் தமது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கவுர் (Nikki Kaur) நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மேயர் அலுவலகம் கருத்து கூற மறுத்துள்ளதுடன், இது தனிப்பட்ட விவகாரம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

முதன்மை நிர்வாக அதிகாரிக்கு நகரின் வளர்ச்சி தொடர்பில் முடிவெடுக்க முழு அதிகாரம் உண்டு என குறிப்பிட்டுள்ள மேயர் பிரவுன், அவர் எங்கள் சக ஊழியர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.