Reading Time: < 1 minute

கனடாவில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகங்களை மூடுமாறு சீக்கிய குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வான்கூவார் மற்றும் டொரன்டோவில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகங்களை மூடுமாறு பிரிட்டிஷ் கொலம்பிய சீக்கிய ஆலய பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த ஆலயத்தின் பிரதம குரு ஹார்திப் சிங் நிஜார் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் இந்தியாவிற்கு நேரடி தொடர்பு உண்டு என குறித்த குழுவும் கனடிய அரசாங்கமும் குற்றம் சுமத்தி இருந்தது.

இவ்வாறான ஒரு பின்னணியில் அண்மைய நாட்களாக இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் பெரும் முரண்பாட்டினை உருவாக்கியுள்ளது.

இரு நாடுகளும் தங்களது நாடுகளில் சேவையாற்றி வந்த ராஜதந்திரிகளை வெளியேறிச்செல்லுமாறு உத்தரவிட்டிருந்தனர்.

சீக்கிய பிரதிநிதிகள் குழு ஒன்று நடத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு துணை தூதரகங்களை மூடுமாறு கோரியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. தாக்குதலின் பின்னணியில் இந்திய அரசாங்கம் செயற்பட்டுள்ளமை புலனாய்வு தகவல்கள் மூலம் அம்பலம் ஆகியுள்ளது என கனடா குற்றம் சுமத்தியுள்ளது.