Reading Time: < 1 minute

கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்த விடயத்தில், அந்த ஓவனை அகற்ற ஏற்கனவே திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த குர்சிம்ரன் கௌர் (Gursimran Kaur, 19) என்னும் இளம்பெண்ணும் அவரது தாயும், Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் பணி செய்துவந்துள்ளார்கள்.

அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, மகளைக் காணாமல் தேடிய அவரது தாய், குர்சிம்ரனுக்கு போன் செய்ய, அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.

அப்படி தன் மகள் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்யமாட்டார் என்பதை அறிந்த அவரது தாய் மகளைத் தேடி அலைய, குர்சிம்ரன், ஆள் நடக்கும் அளவிலான ஓவன் ஒன்றிற்குள் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அந்த ஓவனில் ஏற்கனவே பிரச்சினை இருந்திருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதனால், அந்த ஓவனை அகற்ற ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாக வால்மார்ட் பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது.

அப்படி அந்த பல்பொருள் அங்காடி அந்த ஓவனை அகற்றியிருக்குமானால், குர்சிம்ரனுக்கு இப்படி ஒரு கோர முடிவு ஏற்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.