பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கியச் சமயத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனக் கனடா கூறியுள்ளது.
இதனை இந்தியா கவனிக்கவேண்டும் என்றும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தால் கனடா – இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுமென அஞ்சப்படுகின்றது. அதேசமயம் கனடாவின் தம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, அவை அபத்தமானவை என கூறியது.
ஹர்தீப் சிங் நிஜாரை பயங்கரவாதி என வகைப்படுத்திய இந்தியா
கடந்த ஜூன் மாதம் வான்கூவர் அருகில் சீக்கியச் சமயத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் (Hardeep Singh Nijjar) கொல்லப்பட்டார். சீக்கியச் சமயத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜாரை பயங்கரவாதி என இந்தியா வகைப்படுத்தியிருந்தது.
காலிஸ்தான் எனும் சீக்கியர்களுக்கான தனி நாட்டை உருவாக்குவதற்கு ஹர்தீப் சிங் நிஜார் ஆதரவளித்தவர். இந்நிலையில் அவரது மரணத்துக்கும் இந்திய உளவுத் துறையினருக்கும் சம்பந்தம் இருப்பதைக் காட்டும் நம்பகமான தகவல் தன்னிடம் இருப்பதாகக் கனடா கூறுகிறது.
அதேவேளை கனடாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அக்கறை தெரிவித்துள்ளன. புலனாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது, இருப்பினும் இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகள் அக்கறைக்குரியவை என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong)கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் கனடா, இந்தியா ஆகிய இரு நாடுகளுடனான உறவும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் மிகக் உன்னிப்புடன் செயபடுவதாகவும் கூறப்படுகின்றது.