Reading Time: < 1 minute

கடனாவில் இருந்து இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான கனடாவின் தூததை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கூறியுள்ளது.

இதன் காரணமாக இந்தியா- கனடா ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டார்.

காலிஸ்தான் தலைவர் கொலை
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டியதுடன் , தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது.

கனடாவின் இந்த உத்தரவையடுத்தது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான கனடாவின் தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவரிடம், கனடாவில் ராஜதந்திர அளவிலான மூத்த தூதரக அதிகாரி இன்னும் ஐந்து நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் கனடா நாட்டில் அதிக அளவில் உள்ளனர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஜி20 இல் மனக்கசப்பு
தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவிக்கப்பட்ட போதிலும், அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.

இதனால்தான் ஜி20 மாநாட்டின்போது, பிரதமர் மோடி- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையே மகிழ்ச்சிகரமான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது.

அத்துடன் , எதிர்க்கட்சிகள் கூட்டிய நாடாளுமன்ற அவசர செசனில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது. ஏற்கனவே இந்தியா- கனடா இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கனடா மண்ணில் கனடா குடியுரிமை பெற்ற ஒருவர் கொலையில் வெளிநாட்டு அரசின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும்.

இந்த விசயத்தை தெளிப்படுத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும்” என்றார். கனடா வெளியுறவுத்துறை மந்திரி மெலானி ஜூலி, ”ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.