Reading Time: < 1 minute

இந்தியாவின் இமயமலைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சென்றிருந்த ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரும் ஆராய்சியாளருமான பீட்டர் விட்டெக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,700 மீட்டர் உயரமான அந்த மலை முகட்டுப் பகுதிக்கு ஆறு பேராக இவர்கள் சென்ற நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், அதன்போது அவர்களில் ஐந்து பேர் ஒருவாறு தப்பித்துக் கொண்டதாகவும், பீட்டரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கே நிலவும் சாதகமற்ற வானிலை காரணமாக தேடுதல்களும் தாமதமாவதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் கனேடிய வெளியுறவுத் துறை இதுவரை தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.