இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையை மேலும் ஒரு மாதத்துக்கு கனடா மீண்டும் நீடித்துள்ளது.
பயணிகள் விமானத் தடை நீடிக்கப்படும் அறிவித்தலை கனேடிய போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.
இந்தியா முழுவதும் ஆபத்தான டெல்டா திரிபு வைரஸ் பரவியமையை அடுத்து கடந்த ஏப்ரல் 22 முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா தடை விதித்தது.
தொடர்ந்து மாதாந்தம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமுலில் உள்ள தடை உத்தரவு நாளை 21 ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையிலேயே இந்தத் தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படுவதாக கனேடிய போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா தெரிவித்தார்.
உலகளவில் டெல்டா திரிபு வைரஸ் வேகமாகப் பரவி வருவது குறித்த கவலைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தடை நீடிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.