Reading Time: < 1 minute

இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் கோரி கனடிய வாழ் சீக்கியர்கள் பொது வாக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.

நேற்றைய தினம் இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாங்கூவாரில் சர்ரே பகுதியில் இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் வாக்களித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஹார்திப் சிங் நிஜார் தலைமை தாங்கிய சீக்கிய ஆலயத்தில் இந்த பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வெளியே நடத்தப்படும் எந்த ஒரு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் இந்தியா பொறுப்பு அல்ல என ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதன்படி இந்த பொது வாக்கெடுப்பின் முடிவுகளை இந்தியா கருத்த்திற் கொள்ளாது என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலை மேலும் வலுப்பெற இந்த பொது வாக்கெடுப்பு ஓர் ஏதுவாக அமையும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.