Reading Time: < 1 minute

கனேடியர்கள் இருவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், பனிப்புயலில் சிக்கினார்கள்.

கனேடியர்கள் இருவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், Dolomite மலைகளில் ஏறியுள்ளார்கள்.

ஆனால், எதிர்பாராதவிதமாக, திடீரென பனிப்புயல் வீசியுள்ளது. இருவரும் குளிரில் வாடிய நிலையில், அதீத குளிரால் ஏற்படும் ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வியாழனன்று இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், இருவரும் உதவி கோரி அழைக்க, மீட்புக் குழுவினர் அங்கு சென்றும், மோசமான வானிலை காரணமாக, உடனடியாக அவர்களால் ஹெலிகொப்டர் மூலம் அவ்விருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் நிலைமை மோசமாகிக்கொண்டே செல்ல, அவர் மலையிலேயே உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை புயல் நின்றதும், அந்தப் பெண்ணுடன் சென்றிருந்த 56 வயது ஆணை ஹெலிகொப்டர் மூலம் இத்தாலியிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றுள்லார்கள். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.