டொரன்டோவை சேர்ந்த நபர் ஒருவர் இணைய மோசடியில் சிக்கி சுமார் ஒரு லட்சம் டாலர்கள் வரையில் இருந்துள்ளார்.
முதலீட்டு திட்டம் ஒன்று தொடர்பில் விளம்பரம் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொரன்டோவை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் சுமார் ஒரு லட்சம் டாலர்களை இவ்வாறு முதலீடு செய்து இழந்துள்ளார்.
கிரிப்டோ முதலீட்டு திட்டம் ஒன்றில் இவ்வாறு பண மோசடி செய்யப்பட்டதாக குறித்த நபர் தெரிவிக்கின்றார்.
எனவே முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போது இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மிகுந்த அவதானத்துடன் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மோசடிகாரர்கள் பல்வேறு வழிகளில் பணத்தை அபகரிக்க முயற்சிக்கலாம் எனவும் பிரபல நிறுவனங்களில் பெயர்களிலும் இவ்வாறான மோசடிகள் இடம் பெற கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.