கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் இட்டாபிகோக் பகுதியில் சாரதியொருவர் பாதசாரி மீது வாகனத்தை மோதி, தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விபத்தில் 59 வயதான நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இட்டாபிகோக்கின் செகன்ட் ஸ்ட்ரீட் மற்றும் லேக் சோர் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடின நிறமுடைய போர்ட் பிக்கப் ரக வாகனத்தில் பயணம் செய்த சாரதியே இந்த விபத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதையை கடக்க முயற்சித்த போது வாகனம் பாதசாரி மீது மோதியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதசாரி மீது வாகனத்தை மோதுண்டு தப்பிச் சென்ற நபர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த விபத்து தொடர்பில ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.