ஆள் மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட கனடிய பிரஜை ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் கொலவ்னா பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்க மொன்டெனா மாவட்ட நீதிமன்றம் குறித்த நபருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
போலி பெயர்களை பயன்படுத்தி இந்த நபர் அமெரிக்காவில் துப்பாக்கிகளை கொள்வனவு செய்துள்ளார்.
பல்வேறு நபர்களின் பெயர்களை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிகளை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு துப்பாக்கிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
ஆயுத கொள்வனவின்போது போலி தகவல்களை வழங்கியதாக குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் குறித்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரிடமிருந்த 12 ஆயுதங்களை கையகப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறான நபர்களே சட்டவிரோத ஆயுத கலாச்சாரத்தை உருவாக்குவதாக நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.