கனடாவின் வின்னிப்பிக் பகுதியில் சிரேஷ்ட பிரஜை ஒருவர் வசித்து வந்த வீட்டிற்கு மாதாந்த நீர் கட்டணமாக 146000 டாலர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
வழமையாக மாதாந்தம் 118 டாலர்கள் நீர் கட்டண பட்டியலாக தமக்கு கிடைக்கப்பெறும் என அவர் தெரிவிக்கின்றார்.
எவ்வாறு எனினும் திடீரென தமது நீர் கட்டண பட்டியல் 146000 டாலர்கள் ஆக பட்டியலிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நீர் பட்டியலை பார்த்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக டொர்டி மாட்டின் என்ற வயோதிப பெண் தெரிவிக்கின்றார்.
தனது வங்கிக் கணக்கிலிருந்து இந்த நீர் கட்டணம் அறவீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் குறைவடைந்ததை அவதானித்த தாம் அது குறித்து தேடிய போது நீர் கட்டணத்திற்காக இவ்வளவு பாரிய தொகை அறவீடு செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்தது என குறிப்பிடுகின்றார்.
தமது வழமையான நீர் கட்டணத்தை விடவும் ஆயிரம் மடங்கு அதிகளவு கட்டணம் பட்டியலிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நீர்மானி வாசிப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இவ்வாறு கூடுதல் தொகை அறவீடு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.