கடந்த காலங்களில் உலகளவில் பெரிதும் பேசப்பட்ட அவுஸ்ரேலியக் காட்டுத்தீயை அணைக்க உலக நாடுகள் கைகோர்த்திருந்த நிலையில், கனடாவின் உதவிக் கரமும் இதற்கு மிக முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தது.
171 கனேடிய தீயணைப்பு முகாமை மற்றும் தீயணைப்பு நிபுணர்கள் அவுஸ்ரேலியாவில் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
இதில் அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில், சிறப்பான பங்களிப்பு வழங்கிய அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த இருவர் நாடு திரும்பியுள்ளனர்.
பான்ஃபில் உள்ள தீயணைப்பு தாவர நிபுணர் ஜேன் பார்க் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த தீயணைப்பு நிர்வாக அதிகாரி ஸ்பென்சர் வேர்டியேல் ஆகிய இருவருமே தற்போது நாடு திரும்பி அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.
‘முற்றிலும் மாறுபட்ட சூழல், வேறு நாடு இது சவாலாக இருந்தது. தாவரங்களைப் புரிந்துகொள்வது, அவுஸ்ரேலியா மற்றும் நியூசவுத் வேல்ஸின் தீ சூழலியல், நிச்சயமாக ஒரு தொழில்முறை பார்வையில் மிகவும் சுவாரஸ்யமானது’ என கூறினர்.