Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலை, எதிர்வரும் மே 6ஆம் திகதி வரை நீடிக்கும் என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கூறுகையில், ‘கொரோனா வைரசுக்கு எதிரான நமது போரில் நாம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருகிறோம். ஆனால் நாம் ஆபத்தில் இல்லாமல் இல்லை.

அனைத்து ஒன்றாரியோர்களையும் தொடர்ந்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த அவசர உத்தரவுகளை நீட்டிப்பது முற்றிலும் அவசியம் ‘என கூறினார்.

அத்தியாவசியமற்ற அனைத்து வணிகங்கள், பள்ளிகள் ஆகியவற்றை மூடுதல், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் கூடுவதை தடை செய்தல், பயன்பாட்டு நேர மின்சார விலை முறையை முடிவுக்குக் கொண்டுவருதல், நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் பணி ஒதுக்கீட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஏராளமான பிற நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.

இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் 17ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.