கனடாவின் எடிசன் பகுதியில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அவசர உள்ளூர் அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ள நிலைமை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறுகிய காலப்பகுதியில் 85 மில்லி மீட்டர் அளவில் குறித்த பகுதியில் மழை பெய்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் செயல்படவில்லை எனவும் அனேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளம் காரணமாக வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மக்களுக்கு உதவும் வகையில் மீட்பு பணியாளர்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் கெவின் சஹாரா தெரிவித்துள்ளார்.
அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அல்பர்ட்டாவின் அவசர முகாமை முகவர் நிறுவனம் மற்றும் அண்டைய மாநகர சபைகள் என்பன பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 780-723-6300 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணத்தில் சில வாரங்களாக கடுமையான காட்டு தீ பரவி வந்த நிலையில் தற்பொழுது மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.