Reading Time: < 1 minute

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியில் இருந்து அல்பர்ட் பயணம் செய்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

குறித்த மூவரையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

ஹாரூன் ஹோம் மற்றும் இரண்டு பிள்ளைகள் இவ்வாறு காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூவருக்கும் என்ன நேர்ந்தது என்பது குறித்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

38 வயதான ஹாரூன் வெள்ளையினத்தவர் எனவும் அவர் 5 அடி 9 அங்குல உயரமானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவர்களை ஆரோன் கடத்தி இருக்க வாய்ப்பு குறைவு என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இன்னும் சிறுவர்களையும் ஹாரோனையும் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.