Reading Time: < 1 minute
அறுகம்பே பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது
அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, சர்பிங் செய்பவர்கள் அடிக்கடி வரும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியும் கூட. இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்திருந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இவ்வாறு அறிவித்துள்ளது.