Reading Time: < 1 minute
அரசியல் விடயங்களில் கவனம் செலுத்தப் போவதில்லை என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த என்டிபி கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
இதனால் கனடிய அரசியல் வட்டாரத்தில் குழப்பநிலை உருவாகியுள்ளது.
எதிர்வரும் தேர்தல் வரையில் கனடிய மக்களுக்கு என்ன தேவை என்பதை முதன்மை நோக்காகக் கொண்டு செயல்பட போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக அரசியல் விவகாரங்களில் தற்போதைக்கு கவனம் செலுத்த போவதில்லை போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஏனைய கட்சிகள் அரசியல் பற்றி கரிசனை கொள்ள தாம் இடம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
என்.டி.பி. கட்சி அளித்த வாக்குறுதிக்கு அமைய கொள்கைகளின் பிரகாரம் தொடர்ந்தும் தமக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.