அரசியல்வாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள், வன்முறைகள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசியல் தலைமைகள் இணைய வேண்டுமென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
பிரதி பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலண்ட்டை நபர் ஒருவர் அண்மையில் இழிவான வார்த்தைகளில் திட்டியிருந்தார்.
லிப்ட் அருகாமையில் சென்ற போது நபர் ஒருவர் கடுந்தொனியில் இழிவான வார்த்தைகளினால் ப்ரீலாண்டை திட்டியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்த சிறு காணொளியொன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அச்சுறுத்தல்கள், வன்முறைகள், அடக்குமுறைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஜனநயாகத்தினை மலினப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களுக்கு அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் தங்களது எதிர்ப்பை வெளியிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிறம், மதம், பால் அனைத்தையும் புறந்தள்ளி அனைவரும் மரியாதையாக நடாத்தப்பட வேண்டுமென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.