Reading Time: < 1 minute

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரதான கடவையை போராட்டக்கார்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் அதனை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்ராறியோவில் உள்ள அம்பாசிடர் பாலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனரக வாகன சாரதிகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு எதிரான நீதிமன்றின் தடை உத்தரவை அமுல்படுத்துமாறு அதிகாரிகள் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இருப்பினும் கனடியக் கொடிகளை அசைத்த மக்கள் கூட்டம் இந்த உத்தரவை மீறி பாலத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.

இதேவேளை குறித்த போராட்டங்கள் மற்ற எல்லைக் கடக்கும் இடங்களிலும், ஒட்டாவாவிலும் இடம்பெற்று வருகின்றன.