Reading Time: < 1 minute

அமெரிக்காவினால் வரி விதிக்கப்பட்டால் ஒன்றாரியோ மாகாணம் கடுமையாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ மற்றும் கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இவ்வாறு வரி விதிக்கப்பட்டால் அதில் அதிக அளவில் ஒன்றாரியோ மாகாணம் பாதிப்புகளை எதிர்நோக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்கள் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீதம் வரையில் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

வரி விதிக்கப்பட்டால் அது ஒன்றாரியோ பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஒன்றாரியோவின் வாகன கைத்தொழில்துறை மோசமாக பாதிக்கும் எனவும் அதிக அளவான பணியாளர்கள் பணி நீக்கப்படுவார்கள் எனவும் பொருளியல் நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.