Reading Time: < 1 minute

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தேசிய சுற்றுலா சர்வே தரவுகள் தெரிவிக்கின்றன.

Tamil Business Directory

2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் கனடாவாசிகள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம் குறைந்துள்ளது.

பயணங்களின் எண்ணிக்கை குறைந்ததால், அமெரிக்காவில் கனடாவாசிகள் செய்த செலவு சுமார் 800 மில்லியன் டொலர் வரை சரிவடைந்துள்ளது.

இதில் விமானக் கட்டணம் மற்றும் கனடாவில் பயணத்திற்காகச் செய்யப்பட்ட ஆரம்பச் செலவுகளும் அடங்கும்.

அமெரிக்க பயணங்களைத் தவிர்த்து கனடாவாசிகள் தங்கள் சொந்த நாட்டின் சுற்றுலாத் துறையை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.

2025 முதல் காலாண்டில் 13.8 பில்லியன் டொலராக இருந்த கனடாவின் உள்நாட்டுச் சுற்றுலாச் செலவு, 2026 முதல் காலாண்டில் 14.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கனடாவாசிகள் அமெரிக்கப் பயணத்தைக் குறைத்துக் கொண்டபோதிலும், அமெரிக்கர்களிடையே கனடாவிற்குச் செல்லும் ஆர்வம் குறையவில்லை.

2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் கனடாவில் சுமார் 3 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளனர்.

இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் 500 மில்லியன் டொலர் அதிகமாகும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.