Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவினை உன்னிப்பாகக் கவனிப்பதாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

பார்லிமெண்ட் ஹில்சில் வைத்து அமெரிக்க தேர்தல் குறித்து ட்ரூடோவிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நம் அண்டை நாட்டின் தலைவராக யார் இருப்பார்கள் என்பதைப் பார்ப்பதற்கு நீண்ட இழுபறியில் பல நாட்கள் நாம் காத்திருக்க வேண்டி வரலாம்.

நிச்சயமாக, நாம் அதை கவனமாகப் பின்பற்றுகிறோம். நாள் மற்றும் நாட்கள் வெளிவருவதால் எதிர்பார்ப்புகள் தொடரும்.

அமெரிக்காவில் ஒரு தேர்தல் செயல்முறை நடந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். தானும் தனது அரசாங்கமும் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம்” என கூறினார்.