Reading Time: < 1 minute
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கிடையில், காணொளி காட்சி வாயிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது பொருளாதாரம் வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிப்பார்கள்.
ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
முன்னதாக அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு கனடா அரசாங்கத்தின் சார்பாக ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.