Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கனடாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் கனடிய இறையாட்சியை கேள்விக்குள்ளாக்கும் வகையில் வெளிப்படையாக தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றைய தினம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற வேண்டும்” என்ற ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு நாடு தழுவிய அடிப்படையில் கனடாவில் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மொன்ட்ரியாலில், மவுண்ட் ராயல் பூங்காவில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று கூடி, “எங்களைத் தொடாதீர்கள்!” மற்றும் “கனடா ஏற்கனவே சிறந்த நாடாக இருக்கிறது!” என வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கண்காணிப்புகள் மற்றும் சுதந்திரங்களை காப்பதற்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.