Reading Time: < 1 minute

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத் தீயணைப்புப் பணிகளில் கனடிய விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கியூபெக்கை மையமாகக் கொண்ட விமானிகள், விமானப் பணியாளர்கள் இந்த தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்டுகின்றது.

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெப்பநிலை மற்றும் காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.