Reading Time: < 1 minute

அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்போரை கூட்டுப் படுகொலை செய்வதாக மிரட்டிய 17 வயதான கனேடிய சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனேடிய பொலிஸார் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் மீது தாக்குதல் நடாத்துவதாக குறித்த சிறுவன் மிரட்டல் விடுத்திருந்தான்.

இணைய வழியில் காணொளி ஊடாக இவ்வாறு குறித்த சிறுவன் மிரட்டல் விடுத்தான் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்ப்பவம் தொடர்பில் சர்வதேச ரீதியிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைகளுக்கு றொரன்டோ மற்றும் பீல் பிராந்திய பொலிஸாரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்தப் போவதாக காணொளியில் காண்பித்து மிரட்டிய துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஓரினச் சேர்க்கையாளர்களின் அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தி கூட்டுப் படுகொலை செய்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சிறுவன் என்ற காரணத்தினால் பெயர் விபரங்களை வெளியிடவில்லை. சிறுவன் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.